Police Department News

மதுரை விளக்கு தூண் பகுதியில் ஜவுளி கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்பை பறித்த பெண் கைது

மதுரை விளக்கு தூண் பகுதியில் ஜவுளி கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்பை பறித்த பெண் கைது

மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் நகரைச சேர்ந்தவர் காசிராஜா. இவரது மனைவி உமாதேவி வயது 52. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர் நேற்று கீழவாசல் பகுதிக்கு ஜவுளி வாங்க வந்தார். அப்போது உமாதேவி வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினார். அதில் ரூ. 2 ஆயிரம் இருந்தது.

இது தொடர்பாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள், மீனாட்சி கோவில் சரக உதவி கமிஷனர் காமாட்சி மேற்பார்வையில், விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் உமாதேவியிடம் பணப்பையை பறித்தது பெண் என்றும், அவர் மேலூர் மில் கேட் சிங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயந்தி என்ற லதா வயது 45 என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.