
திருமங்கலத்தில் 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் பெரிய கடைவீதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பெரிய கடைவீதியில் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட வீட்டில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
வீட்டில் 63 மூட்டைகளில் 50 கிலோ வீதம் 3,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த பெரிய கடைவீதியை சேர்ந்த சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
