திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதி சேர்ந்தவர் ஜோஷிதா 24 வயது இவர் இவர் தமது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் பொன்னேரி காவல் நிலையம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதி இளம் பெண் ஜோஷிதா தவறி கீழே விழுந்து தலை நசுங்கி துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர் இதைக் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி கௌரி திரையரங்கம் அருகே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் லாரி ஓட்டுநர் மணி என்பவரை கைது செய்து இந்த விபத்தில் குறித்து செங்குன்ற போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர் பொன்னேரியில் பாதாள சாக்கடை பணியாளர்கள் காரணமாக பல இடங்களில் சாலையோரங்களில் பள்ளம் தோண்ட பட்டு சேரும் சகதி ஆகவும் மணல் திருட்டுக்களாகாக காணப்பட்டு வருகிறது இதனால் இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக பொன்னேரி செய்தியாளர் J.ஜமால் பாபா