
மதுரை சேடபட்டி அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல் 2 நபர்கள் கைது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி பகுதியில் மதுரை டிஐஜி பொன்னி அவர்களின் தலைமையிலான போலீசார் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேடபட்டி அருகே கம்மாளபட்டியை சேர்ந்த சேதுராமன் மகன் ஆனந்த் வயது 21/22, பாலுச்சாமி மகன் ஆனந்தகுமார் வயது 28/22, ஆகியோர் டூ வீலரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி விசாரணை செய்ததில் அவர்களிடம் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. கஞ்சா டூ வீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து சேடபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
