

மேற்கு வங்காளத்தை சேர்ந்த குடும்பத்தினர் ஆட்டோவில் தவற விட்ட பையை மீட்டுக்கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்
நேற்று மாலை மேற்கு வங்காளத்தை சேர்ந்த குடும்பத்தினர் சோனாலி தலுக்டர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர் ஆட்டோவில் வந்த இவர்கள் தங்களுடைய கைபையை ஆட்டோவில் தவற விட்டு விட்டனர் அப்போது அங்கு வந்த மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்களிடம் கூறினார்கள் மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அக்கம்பக்கத்தில் தீவிர விசாரணை செய்தனர் பிறகு அந்த பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர் அதில் உறுவங்கள் தெளிவாக தெரியவில்லை இருந்த போதும் அங்கிருந்த ஆட்டோ தொழிற்சங்கம் அருகில் உள்ளோர் கொடுத்த தகவலின் பேரில் மேற்கண்ட ஆட்டோ ஓட்டுனரை கண்டறிந்து தொடர்பு கொண்டு விசாரித்ததில் அந்தப் பை ஆட்டோவிலேயே இருந்தது தெரிய வந்தது. உடனே ஆட்டோ ஓட்டுனரை வர வழைத்து அந்த பையை உரிய நபர்களிடம் பெற்றுத்தந்தனர் மேலும் ஓட்டுநரின் நேர்மையை பாராட்டி அவருக்கு சிறிய பணவெகுமதி வழங்கப்பட்டது.
