Police Department News

மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாப்பாரில் விழுந்த குழந்தை உயிரிழந்தது .

மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாப்பாரில் விழுந்த குழந்தை உயிரிழந்தது .

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர் ஜீவா நகரை சேர்ந்த அருணகிரி. இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு,2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை,சுகுணா வீட்டில் சாம்பார் செய்த பாத்திரத்துடன் அதனை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைக்க வெளியே சென்றார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து வந்த ஒன்றரை வயதான, 2 வது மகள் தேன்மொழி தடுமாறி கொதிக்கும் சாப்பார் பாத்திரத்தில் விழுந்தார். பிறகு குழந்தையில் அலறல் சத்தம் கேட்டு தாய் சுகுணா ஓடிவந்து குழந்தையை மீட்டு மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பிறகு மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அன்று இரவு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து மாரண்டஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.