மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறையினர் 03:11:2020 திண்டுக்கல்லில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் முக கவசம் அணியாமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.விஜயகுமார் இணைந்து போக்குவரத்து காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல், அதிக ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்த 10 ஆட்டோக்கள் மீது வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்தார்கள்
