Police Department News

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் 02 கார்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் 02 கார்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முள்ளிப்பாடி செட்டியபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சந்தேகத்தின் படி வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 400 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பிரவீன்(29) சதீஷ்குமார்(26) மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சரவணகுமார்(27) ஆகிய மூன்று நபர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்த இருந்தது தெரியவந்தது, மேற்கண்ட 3 நபர்கள் மீது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

மேலும் அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.