
இரவு நேரக்கடைகள் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை இம்சிக்க கூடாது டி.ஜி.பி. உத்தரவு
இரவு நேரங்களில் திறந்திருக்கும் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை இம்சிக்க கூடாது என போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அரசின் உத்தரவின்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம்
இது குறித்து சென்னை உயர்நீதி மன்றமும் காவல் துறைக்கு வழி காட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
அரசாணை மற்றும் நீதி மன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என போலீஸ் கமிஷணர்கள் மற்றும் எஸ்பிகளுக்கு ஏற்கனவே வலியுறுத்தப்பாட்டுள்ளது
அதே வேளையில் சட்ட விரோத செயல்களோ தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது
இதை அனைத்து போலீஸ் கமிஷணர்கள் மற்றும் எஸ்பிக்களும் பின்பற்ற வேண்டும் தவறு செய்யும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும்
இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்
