
விவசாய நிலத்தில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்த முதியவர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாலக்கோடு அடுத்த எருமாம்பட்டி கிராமத்தில் கஞ்சாசெடி வளர்த்து விற்பனை செய்வதாக பாலக்கோடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் பாலக்கோடு அடுத்த எருமாம்பட்டி கிராமத்தில் நடத்திய சோதனையில், பச்சியப்பன் (60) என்பவர் தனது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
உடனடியாக காவல்துறையினர் பச்சியப்பனை கைது செய்து அவரிடமிருந்த 12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
