Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி தமிழரசி (வயது 56). இவர் ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறார். தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியில் வசிக்கும் தங்கவேலு மகள் சத்யா (45) என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சத்யா, எனது மகள் ஜெர்மனியில் வசிக்கிறாள். அவள் மூலம் உங்களுக்கு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.16 லட்சம் கடன் வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய தமிழரசி, அவரிடம் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 700 கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட சத்யா கடன் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த தமிழரசி தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து சத்யா வீட்டை பூட்டிவிட்டு மாயமாகி விட்டார். இதுபற்றி தமிழரசி இந்து கோவில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரிடம் கூறி உள்ளார். அப்போது தான் சத்யா ஏற்கனவே மேற்கண்ட அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள சிவசங்கரி, ரமேஷ்குமார், மகாலட்சுமி ஆகியோரிடமும் கடன் வாங்கி தருவதாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 750 வாங்கி மோசடி செய்தி ருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தமிழரசி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் தெற்கு வாசல் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் உத்தரவின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தனமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது தமிழரசி பணம் அனுப்பியதற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்களை காட்டினார். இதைத்தொடர்ந்து மாயமான சத்யாவை போலீசார் தேடிப்பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் சத்யா பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 450 மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.