
மேலூர் டிஎஸ்பி அவர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்
மேலூரில் அரசு மருத்துவ மனை சார்பாக உடற்காய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமை வகித்தார் சிஎம்ஓ ஜெயந்தி முன்னிலை வகித்தார். டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் சுகாதாரப்பணியாளர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
சிஎம்ஓ தலைமையில் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்தும் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரணன் தலைமையில் விபத்தில் காயமடைந்தோரை மீட்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.
