Police Department News

என்.ஐ.ஏ.,வில் புகார் அளித்த வழக்கறிஞரிடம் விசாரணை

என்.ஐ.ஏ.,வில் புகார் அளித்த வழக்கறிஞரிடம் விசாரணை

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அமைப்பிடம் புகார் அளித்த மதுரை வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

பி.எப்.ஐ., உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் என்.ஐ.ஏ.,விற்கு புகார் அளித்ததன் பேரில் இவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னர், டி.ஜி.பி., மதுரை கலெக்டருக்கு இவர் மீண்டும் அனுப்பிய மனுவில், ‘ஹிந்து அமைப்புகளை சேர்ந்த சிலரை குறிவைத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் தொடர்பு உடையவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இவரது மனுவை விசாரிக்க கீரைத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. நேற்று இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் முன் முத்துக்குமார் ஆஜரானார். அவரிடம் ஒரு மணிநேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.