

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பி.வி சாலா மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்
உத்தரவின் பெயரிலும் அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரிலும் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக ஆய்வாளர் திரு செந்தில்வேல் சார்பு ஆய்வாளர்கள் திரு முருகன் மற்றும் செல்லத்துரை பயிற்சி சார்பு ஆய்வாளர் திருமதி அழகுராணி அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலையில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் தலை கவசத்தின் பயன்பாடுகள் சீட் பெல்ட் பற்றிய அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி உதவி:-
S.ரெங்கராஜ்
