
மதுரையில் ஷேர் ஆட்டோக்களின் விதி மீறல்
மதுரையில் 3 விதமான ஆட்டோக்கள் இயங்குகின்றன. ரோட்டோரம் ஆங்காங்கே ஸ்டாண்ட்டுகள் அமைத்து இயங்கும் சாதாரண ஆட்டோக்கள் இதில் ஓட்டுனருடன் 3 பேர் பயணிக்க அணுமதியுண்டு. அடுத்து டீசல் ஆட்டோக்கள் இவை ஷேர் ஆட்டோக்கள் என்ற பெயரில் ஓடுபவை இதில் ஓட்டுனருடன் 3 பேர்தான் பயணிக்க முடியும் கூடுதலாக சுமைகளை ஏற்றி செல்லலாம் என்பதால் இவை லக்கேஜ் கேரியர்களாக செயல் படுகின்றன.
சில ஓட்டுனர்களால் இந்த ஆட்டோக்களில் அத்து மீறல் அதிகம் சில அணுமதியின்றி ஓடுகின்றன பலர் சீருடை அணிந்திருப்பதில்லை 3 பேருக்கு பதில் 10 பேர் வரை திணித்து கொண்டு பறக்கின்றன நினைத்த இடத்தில் திடீரென்று நிறுத்தி பயணியர்களை ஏற்றி இறக்குவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன மாட்டுத்தாவனி தெப்பக்குளம் ரோடு செல்லூர் பகுதி புதூர் ரோடு தேனி ரோடு பழங்காநத்தம் பைபாஸ் ரோடு என அணைத்து பகுதிகளிலும் இவைகள் இஷ்டம் போல இயங்குகின்றன வரைமுறையின்றி செயல்படும் இந்த ஆட்டோக்களால் விபத்துக்களும் அதிகம் அடுத்ததாக அபே ஆட்டோ எனப்படும் ஷேர் ஆட்டோக்கள் நகரில் 45 வாகனங்கள் இயங்குகின்றன கூண்டு வண்டிகளை போல இயங்கும் இவற்றில் ஓட்டுனருடன் 5 பேர் பயணிக்கலாம் பஸ் ஸ்டான்ட் ரயில்வே ஸ்டேசன் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணிகள் சென்று சேரும் இடம் வரை நிற்காமல் செல்ல வேண்டும் ஆனால் இவை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலில் இருந்து இஸ்டம் போல சுற்றி வருகின்றன
இவ்வாறு ஆட்டோக்கள் அத்துமீறி பறப்பதால் பயணிகள் அவதிப்படுவதுடன் பாதசாரிகளும் அச்சத்துடன் செல்லுகின்றனர் இது குறித்து மதுரை வழக்கறிஞர் திரு.முத்துகுமார் அவர்கள் கூறுகையில் அபே ஆட்டோக்களில் பல முறையாக பதிவு செய்யாமல் இயங்குகின்றன இவைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கதவு பொருத்தப்பட வேண்டும் இவை விதி மீறி டிராவல்ஸ் வாகனங்கள் செல்லுவது போல் சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகின்றன டீசல் ஆட்டோக்களில் முறைமாக ஓட்டுனர் உரிமம் இன்சூரன்ஸ் கூட வைத்திருப்பதில்லை இதனால் விபத்தில் சிக்கும் பயணிகளுக்கு இழப்பீடு பெற முடியாது எனவே முறைகேடாக இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்
