மகேந்திரமங்கலம் அருகே ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை .
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே வெலகலஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் (வயது.66), இவர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் உள்ள உறவினரின் திருமணத்திற்க்கு சென்றார்,
மறுநாள் காலை அவரது வீட்டின் எதிர் வீட்டினர் பண்னீர்செல்வம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பண்ணீர் செல்வத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீட்டிற்க்கு வந்த பண்னீர்செல்வமும் அவரது மனைவியும் பீரோ உடைக்கப்பட்டு ஆரம், காசுமாலை, கைச் செயயின், வளையல், தோடு உள்ளிட்ட 51 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக மகேந்திரமங்கலம் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டினுள் பல்வேறு இடங்களில் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர், மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீட்டில் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.