

பாலக்கோட்டில் குடிநீர் கேட்டு சாலை மறியல்- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பகுதிகளான 1,2, 3, 8,10 ஆகிய 5 வார்டுகளில்
சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 1 மாதமாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் முறையாக வருவதில்லை எனவும் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகம் செய்வதாகவும் இதனால் போதிய தண்ணீர் இன்றி அவதிப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர்கள் விமலன், குருமணிநாதன் தலைமையில் நேற்று காலை தீடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பாலக்கோடு – பெல்ரம்பட்டி சாலையில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவலறிந்த பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, பாலக்கோடு துனை கண்காணிப்பாளர் சிந்து ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக தண்ணீர் விட ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
