
மதுரை அருகே மேலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிளை பொருள்கள் பறிமுதல்
மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடுக்கும் பொருட்டு மேலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவகங்கை ரோடு அருகே மேலூர் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் திரு.ஜெய பாண்டியன் மற்றும் போலீசார் தீவிரர் வந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர்களை போலீசார் கைது செய்தனர் மேற்படி கைது செய்த நபர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 195 கிலோ 980 கிராம் மற்றும் பணம் ரூ.5,440 பறிமுதல் செய்து மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்தனர் மேலும் இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
