
8 வழக்குகளில் தலைமறைவாக இருந்த நபர் 21 கிலோ கஞ்சாவுடன் கைது
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் 8 கஞ்சா வழக்குகளில் தலைமறைவாக இருந்த ராம்ஜிநகரைச் சேர்ந்த மதன் என்கிற மதுபாலன் (29), என்பவரை மத்திய மண்டல காவல்துறை தலைவர், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், ஆகியோரின் உத்தரவுக்கிணங்க, தனிப்படையினர் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் நாவலூர் குட்டபட்டு அருகிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலை கழக சாலை சந்திப்பு அருகில் ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கை செய்த போது மதனை கைது செய்தனர்.
இதில் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவுடன், இருசக்கர வாகனம் ஆகியவகைகளை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நடுவர் உத்தரவு படி 18.11.22 தேதிவரை நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
