8 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கஞ்சா அழிப்பு
நீதிமன்ற உத்தரவுப்படி திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் திரு .ரூபேஷ் குமார் மீனா. IPS அவர்கள் தலைமையிலான தென் மண்டல போதைப்பொருள் ஒழிப்பு குழுவின் மேற்பார்வையிலும் தென் மண்டல காவல்துறை தலைவர் திரு அஸ்ரா கார்க் IPS அவர்கள் வழிகாட்டுதலின்படியும் விருதுநகர் திருச்சுழியில் உள்ள ராம்கி எனர்ஜி லிமிடெட்டில் 963கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது மதுரை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 8 என் டி பி எஸ் வழக்குகளுக்கு அழித்தல் உத்தரவு பெறப்பட்டு Drug. Disposal. Committee யிடம் சமர்ப்பிக்கப்பட்டது ..கூடுதல் காவல் துறை இயக்குனர்(குற்றம்) திரு மகேஷ் குமார் அகர்வால் IPS.அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்தார் …மதுரை சரக காவல்துறை தலைவர் திருமதி பொன்னி IPS அவர்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மனோகர் IPS. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சிவ பிரசாத் IPS. மற்றும் அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு வருண்குமார் IPS. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்