Police Department News

தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை

தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளை

திருமங்கலம் அருகே தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

திருமங்கலம் அருகே பேரையூர் பக்கமுள்ள அதிகாரிபட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது50). இவரது கணவர் சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.

இதனால் பொன்னம்மாள் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனது ஊரில் உள்ள கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். வீட்டின் சாவியை கதவின் மீது வைத்திருந்தார்.

இந்த நிலையில் கோவி லுக்கு சென்று விட்டு பொன்னம்மாள் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொன்னம்மாள் கோவிலில் இருந்து திரும்பி வந்த போது அவரது வீடு பூட்டி தான் இருந்திருக்கிறது. ஆகவே அவர் கோவிலுக்கு சென்ற போது வீட்டு சாவியை கதவின் மேலே வைப்பதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் தான், அவரது வீட்டில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

அதன் அடிப்படையில் அக்கம்பக்கத்தினர் மற்றும் பொன்னம்மாளின் உறவினர்கள் உள்ளிட்டோ ரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.