Police Department News

சிவில் நீதி மன்றங்களில் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது

சிவில் நீதி மன்றங்களில் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது

ஒரு நபர் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார் என்றால் கடன் கொடுத்தவர் மேற்படி நபரிடமிருந்து ஒரு புரோ நோட் எழுதி வாங்கி கொள்ள வேண்டும் மேற்படி புரோ நோட்டில் ஒரு ரூபாயிகான ரெவினியூ ஸ்டாம்ப் ஒட்டி அதன் மீது ஒரு கையெழுத்தும் அதற்கு கீழே ஒரு கையெழுத்தும் பெற்றுக்கொண்டு அதன் இடது புறம் இரு நபர்களிடம் சாட்சியும் வாங்கி கொள்ள வேண்டும் இது போன்ற புரோ நோட்டுகள் கடைகளில் ரெடி மேடாகவும் கிடைக்கும் அவற்றை வாங்கி பூர்த்தி செய்து கையெப்பம் பெற்று தன் வசம் வைத்துக்கொள்ளலாம். இந்த புரோ நோட்டிற்கு ஆயுள் காலம் 3 வருடங்கள் ஆகும் இவ்வாறு எழுதி கொடுத்த புரோ நோட்டை மதிக்காமல் அசலும் வட்டியும் தர வில்லை என்றாலும் உங்களால் அந்த பணத்தை வாங்க முடிய வில்லை என்றாலும் அந்த புரோ நோட்டினை எழுதி கொடுத்த அந்த நபருக்கு இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 101 ன் கீழ் அந்த அசலையும் வட்டியையும் சேர்த்து கேட்டு ஒரு அறிவிப்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் அனுப்பிய பிறகு அதை வாங்கி கொண்டு எந்த வீத பதிலும் தெரிவிக்காத போது
அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு உரிமையியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 7 விதி 1 ன்படி ஒரு வழக்குரை தயாரிக்க வேண்டும் இதை தாங்கள் வசிக்கும் பகுதிக்குறிய முதன்மை சார்பு நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்றால் முதலில் அவருக்கு அனுப்பிய அறிவிப்புநோட்டீஸ்
அந்த அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பும் போது அஞ்சலகத்தில் கொடுத்த ரசீது நமக்கு கிடைத்த ஒப்புகை அட்டையை இணைக்க வேண்டும் 10,000 ரூபாய்க்கு 300 வீதம் 1 லட்சத்திற்க்கு 3000 ரூபாயிக்குறிய கோர்ட் ஸ்டாம்ப் வாங்கிஇணைக்க வேண்டும் அதன் பின் ஒரு அபிடவிட் பிரமாண பத்திரம் இணைக்க வேண்டும் இதில் இணைக்கப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் அது நகலாக இருந்தால் 5 ரூபாய்க்குறிய நீதி மன்ற கட்டணம் ஒட்ட வேண்டும் அசலாக இருந்தால் அது தேவையில்லை அந்த முதன்மை சார்பு நீதி மன்றத்தில் தாக்கல் செய்தால் உங்கள் மனு எற்க்கப்பட்டு அதன் பின் OS நம்பர் கொடுப்பார்கள் பிறகு பிரதி வாதிக்கு சம்மன் அனுப்ப உங்களை படி கட்டச் சொல்லுவார்கள் நீங்களும் படி கட்டி விட்டால் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளும் பிரதிவாதிக்கு சம்மன் மற்றும் நீங்கள் தாக்கல் செய்த வழக்குரையையும் அனுப்பி வைக்கும் அவர் சம்மனை பெற்றுக்கொண்டு வரவில்லையென்றால் நீதி மன்ற ஊழியர்கள் மூலமாகவும் அஞ்சல் துறை மூலமாகவும் அவர்களுக்கு தெரிவிப்பார்கள் இது போன்று பல சந்தர்பங்களை நீதி மன்றம் வழங்கும் இவை அனைத்தையும் உதாசீனப்படுத்தி விட்டு நீதி மன்றத்திற்கு ஆஜர் ஆகாத போது வழக்குரை தாக்கல் செய்த வாதியை பிரமாண வாக்கு மூலம் தாக்கல் செய்ய சொல்லுவார்கள் தாங்களை பணம் கொடுத்த முதல் சாட்சியாகவும் பணம் கொடுக்கும் போது உடன் இருந்த நபர் இரண்டாம் சாட்சியாகவும் ஆக இருவரையும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சொல்லி அவர்களும் தாக்கல் செய்ய வேண்டும் அதன் பின்
நீதி மன்றத்தில் சுருக்கமான கேள்விகள் கேட்பார்கள் அதற்கு தாங்கள் பதில் கூறி விட வேண்டும் இத்துடன் எக்ஸ்பார்ட்டி தீர்ப்புகான போதுமான நடைமுறைகள் முற்று பெறுகிறது அதன்பின் நீதி மன்றத்தில் தட்டாச்சு செய்த ஆவணத்தில் தங்களிடம் கையெழுத்து பெற்று நீதி மன்றத்தார் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பை உத்தரவிடுவார்

இது திண்டிவணம் ராஜா அவர்களின் சட்ட விழிப்புணர்வு பதிவிலிருந்து தொகுத்தது.

நன்றி. திண்டிவணம்.ராஜா அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published.