
பாலக்கோடு அருகே சூதாடிய 22 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
14 இருசக்கர வாகனங்கள் சிக்கின.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்துவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பாளையம் கிராமத்தில் அருள்பிரகாஷ் என்பவரின் வீட்டில் மங்காத்தா எனப்படும் வெட்டுஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். காவல்துறையை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். 22 பேர் கைது அதில் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி (வயது.42), முருகேசன் (35), தங்கதுரை (22), அருள் பிரகாஷ் (37), எக்காண்டஅள்ளியை சேர்ந்த முரளிதரன் (34), கார்த்தி (29), மூவேந்தர் (19), அன்பரசு (28), நமாண்டஅள்ளியை சேர்ந்த சண்முகம் (57), ஜெய்கணேஷ் (38), கூத்தாண்ட அள்ளியை சேர்ந்த சிதம்பரம் (33), ஓட்டர்தின்னை பகுதியை சேர்ந்த நாகராஜ் (32), அத்தி முட்லு பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) உள்பட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பறிமுதல் செய்தனர். மேலும் 14 மோட்டார் சைக்கிள்களும் சிக்கின. இதுகுறித்து பஞ்சப்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
