
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் கைது
மதுரை மேலவாசல், அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 47). ஜவுளிக்கடை ஊழியர். இவரை நாய் கடித்து விட்டது. தடுப்பூசி போடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
பழைய அரசு மருத்து வமனை சண்முகம் பிள்ளை தெருவில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து மதிச்சியம் போலீசில் புகார் செய்தார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின் பேரில் மதிச்சியம் இன்ஸ்பெக்டர் முத்துமாரி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளை திருடிய கும்பல் பற்றிய விவரம் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கரும்பாலை பி.டி. காலனியில் பதுங்கி இருந்த மணிமாறன் மகன் தினேஷ் (21), பாண்டி மகன் நாகராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம்
மதுரை பரசுராம் பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் விக்னேஷ் (24). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அழகர் கோவில் ரோட்டுக்கு வந்தார். ஐ.டி.ஐ சந்திப்பில் பதுங்கி இருந்த வாலிபர் அரிவாள்முனையில் மோட்டார் சைக்கிளை பறித்து தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிய சம்பக்குளம் பாண்டியராஜ் என்ற அருண் என்பவரை கைது செய்தனர்
