
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட நபர் கைது
மதுரை எஸ்.எஸ்.காலனி, கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் தீனா முருகேசன் (24). இவர் நேற்று எல்லீஸ் நகர், 70 அடி ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற எல்லீஸ்நகர், காந்திஜி காலனி, சம்சுதீன் மகன் முபாரக் அலி (22) என்பவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
