
திருமங்கலம்- காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்தது.
தமிழக முழுவதும் இன்று காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எழுத்து தேர்வு நடந்தது.
தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது. பேனா மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். முழுக்கை சட்டை அணிந்தவர்கள் மடக்கி விடக்கூடாது, பொத்தான் போட்டு மூடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பலத்த சோதனைக்கு பின் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனும திக்கப்பட்டனர். திருமங்கலம் வி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட 2 தேர்வு மையங்களில் 2000 பேர் தேர்வு எழுதினர்.
