
காரிமங்கலம் மகளிர் கல்லூரியில் தேசிய அளவில் பாரம்பரிய சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கம்- காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஶ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய சிறுதானிய உணவு குறித்து விழிப்புணர்வு தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்கம் நிறுவனங்களின் தலைவர் கைலாசம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பாரம்பரிய சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, ராகி, எள், சோளம், சாமை,திணை உள்ளிட்ட தானியங்கள் இருந்து பல்வேறு வகையான உணவு பொருட்கள் தயாரிப்பது மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை உண்ணும் போது குழந்தைகள், பெண்கள் உடலுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுப் பொருட்களை மீட்டு உருவாக்கும் நிகழ்வாகவும் எதிர்கால சந்ததிகளாகிய மாணவிகளிடம் சென்றடையவும் இக்கூட்டத்தின் வாயிலாக உறுதிமொழி ஏற்றனர்.இந்த நிகழ்ச்சியில் செயலாளர் ராஜவினாயகம், கல்லூரி தாளாளர் செந்தில், முதல்வர் பிரேமகுமாரி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் என திரளாக கலந்து கொண்டனர்.
