400 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
மதுரை மாநகரில் ரவுடிகள் மீண்டும் தலை தூக்குவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் ரவுடிகள் தொடர்பாக பட்டியல் தயார் செய்தனர். மதுரை மாநகரில் மட்டும் 400 ரவுடிகள் வசிப்பது தெரிய வந்தது.
ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்துவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சோதனை நடந்தது. 400 ரவுடிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம், ஜெய்ஹிந்துபுரம், திடீர்நகர், கூடல்புதூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 9 ரவுடிகளின் வீட்டில் இருந்து 5 வாள், 2 கத்தி, 1 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பாலாஜி, கார்த்திகேயன் என்ற மெண்டல் கார்த்திக், கருப்பையா என்ற போதகர், சரவணன், நூர்கான், கார்த்திக், விக்னேசுவரன் என்ற பெயிண்டர் விக்கி, பழனிக்குமார், மணிகண்டன் என்ற உசிலை மணி ஆகிய 9 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறை வாக உள்ள ரவுடிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கூறுகையில், மதுரை மாநகரில் ரவுகளின் நட வடிக்கைகளை தொடர்ச்சி யாக கண்காணிக்க உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபடும் ரவுடிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்றார்.