
பாலக்கோடு அருகே தலைமுடி மாடலாக வெட்டிய பள்ளி மாணவன்- தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு ஓட்டம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாதப்பன் இவரது மகன் நித்திஷ்(15) கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார் . அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டிலிருந்த மாணவன் தலைமுடி மாடலாக வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளான். படிப்பில் சரியாக கவனம் செலுத்துவதில்லை ஆனால் தலைமுடியை மட்டும் மாடலாக வெட்டிக் கொண்டு வந்துள்ளாய் என தந்தை கண்டித்ததால் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை விட்டு பள்ளி மாணவன் வெளியேறி தலைமறைவாகியதால்,
தந்தை கடந்த ஏழு நாட்களாக உறவினர், நண்பர்கள் என பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்ரனர். மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் மாணவனை தேடி வருகின்றனர்.
தலை முடிக்காக மாணவன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
