மதுரையில் இளம் பெண்ணிடம் திருட முயன்ற பெண் கைது
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விராதனூர் நெடுங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தேன்மொழி வயது 23 இவர் திருப்பரங்குன்றத்தில் நடந்த அவரது உறவினரின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார் இந்த நிலையில் சன்னதி தெருவில் நின்று தென்மொழி சாமி கும்பிட்டு கொண்டு இருந்தார் அப்போது ஒரு பெண் தேன்மொழி கையில் வைத்திருந்த கைப்பையைத் திறந்து அதில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை திருடு முயன்றதாக தெரிகிறது. உடனே தேன்மொழி சுதாரித்துக் கொண்டு கையும் களவுமாக அந்தப் பெண்ணை பிடித்து திருப்பரங்குன்றம் போலீசில் ஒப்படைத்தார் இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை செய்தனர் அதில் விருதுநகர் பாண்டி நகரை சேர்ந்த சாந்தி வயது 52 என்பது தெரியவந்தது திருட முயன்றதை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.