Police Department News

அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள சந்தைப் பேட்டையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அதிக ளவில் உள்ளன. நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள பிரபல எலக்ட ரானிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை.

இதையடுத்து கொள்ளையர்கள் அருகில் உள்ள ஜவுளிகடை, டீக்கடை, செல் போன்கடை, கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் அடுத்தடுத்து பூட்டு களை உடைத்து உள்ளே புகுந்தனர். மேற்கண்ட 4 கடைகளில் பணம் எதுவும் சிக்காததால் கொள்ளையர்களின் கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர்.

இன்று காலை கடைதிறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலூர் பகுதியில் கடை, வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை யடிப்பது தொடர்கதையாகி விட்டது. எனவே காவல் துறையினர் இரவு நேரங்களில் முக்கிய வீதிகள் மற்றும் நகர் பகுதியில் முழுவதும் தீவிரரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.