இன்று 04.03.2023
வடமாநில மாநில தொழிலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பயத்தை போக்கிய F1- சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம்( சட்டம் மற்றும் ஒழுங்கு)
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு .ராஜாராம் ( சட்டம் ஒழுங்கு) தலைமையில் வட மாநில தொழிலாளர்கள் கலந்தாய்வு முகாம் மூலம் அவர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மனிதநேயத்துடன் எல்லோரும் சமம் என்று காவல்துறை சார்பாக பல்வேறு நம்பிக்கை ஊட்டும் அறிவுரைகளை வழங்கி இங்கேயே மீண்டும் எவ்வித அச்சமின்றி பணி செய்ய நம்பிக்கை சார்ந்த வாக்குறுதிகளை கொடுத்து தவறான மனநிலையில் இருந்த வட மாநில தொழிலாளர்களை நல்லுறவு மேம்பட காவல் துறை மற்றும் தமிழக மக்களிடையே இருக்கிறது என்று ஆலோசனை வழங்கி காவல்துறைக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்தனர் மற்றும் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹோட்டல் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், வாகன ஓட்டும் தொழிலாளர்கள், அழகு கலை தொழிலாளர்கள், மென்பொருள் தொழிலாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரம் சம்பந்தமான தொழிலாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இப்படி வடமாநில தொழிலாளிகள் இடம் பெயர்வதை கருத்தில் கொண்டு மீண்டும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தங்களுடைய அங்கீகாரத்தை கொடுத்து அரசு ஒத்துழைப்புடனும் பொதுமக்கள் ஒத்துழைப்புடனும் எவ்வித அச்சமும் இன்றி பணி செய்யலாம் என்று திரு .ராஜாராம் காவல் ஆய்வாளர் மூலம் நல்ல அறிவுரைகளை வட மாநில தொழிலாளர்கள் பெற்று மகிழ்ச்சியுடன் இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.