Police Department News

இரவில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்பவரை தாக்கி வழிபறி

இரவில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்பவரை தாக்கி வழிபறி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்கலூர் ஊராட்சியை சேர்ந்த ஆரோக்கியம் மகன் மணி (34) என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றார்.

அப்போது மணியை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கழுத்தில் அணிந்திருந்த நகை பறிக்க முயன்றனர். அப்போது நகைகளை தர மறுத்த மணியை மறைத்து வைத்திருந்த கத்தியால் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடினார். கையில் வெட்டுப்பட்ட மணி அங்கிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணிக்கு கையில் 16 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழிப்பறி சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Leave a Reply

Your email address will not be published.