
: மதுரையில் கொரோனா தொற்று நோய் தடுப்பு விதி முறைகளின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும்
மதுரை மாவட்டம் தெற்கு வட்டம் அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.23 தேதியன்றும் மற்றும் வாடிப்பட்டி வட்டம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்ள் முறையே 16.01.23 மற்றும் 17.01.23 தேதிகளில் ஜல்லிகட்டு அரசால் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்படவுள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 10.01.23 ம் தேதி நன் பகல் 12 மணி முதல் 12.01.23 மாலை 5 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும். மேலும் ஜல்லிகட்டில் கலந்து கொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் வயதிற்கான சான்றிதழ் கொரோனா தடுபூசி இரண்டு தவணை போட்டதற்கான சான்றிதழ் முதலியவகைகளை பதிவேற்றம் செய்திடல் வேண்டும் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்று (RT PCR Test) சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார் அதே போல் மேற்படி ஜல்லிகட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகள் ஜல்லிகட்டு நடைபெறும் இடங்கலான அவனியாபுரம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 கிராமங்களிலும் நடைபெறும் ஜல்லிகட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் மேற்படி ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொள்ள விருக்கும் மாட்டின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை 10.01.23 தேதி நன்பகல் 12 மணி முதல் 12.01.23 ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கும் காளைகளுடன் ஒரு உரிமையாளர் மட்டும் மற்றும் நன்கு பழகிய நபர் ஒருவரும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இருவரும் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதல் சமர்பிக்க வேண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் இரண்டு நாட்களுக்குள் தங்களுக்கு கொரோனா தொற்று
இல்லை என்பதற்கான சான்றை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
பதிவு செய்தவர்கள் சான்றுகள் சரிபார்கப்பட்ட பின் தகுதியானவர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் இவ்வாறு டோக்கன் பதிவிறக்க செய்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள முடியும்.
