
பாலக்கோடு பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கண் சிகிச்சை முகாம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் கண் பரிசோதனை முகாம் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைப்பெற்றது.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி கலந்துகொண்டு கண்பரிசோதனையை முகாமை துவக்கி வைத்தார்,
இதில் பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டிராவல் ஓட்டுநர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் போக்குவரத்து பணிமனை மேலாளர் இளங்கோவன், பேரூராட்சி அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
