
பாலக்கோட்டில் ஒன்பது இடங்களில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு.
966 மதுபாட்டில்கள் பறிமுதல் .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் விடுமுறை என்பதால் அரசு மது பாட்டில்களை பதுக்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து களத்தில் இறங்கிய டி.எஸ்.பி சிந்து அவர்கள் மூங்கப்பட்டி தாபா , தளவாய்அள்ளி, தக்காளிமண்டி, குத்தலஅள்ளி, இரயில்வேகேட், காவாப்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான
966 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்தார்..
மேலும் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து எச்சரித்துள்ளார்.
