
பாலக்கோடு அருகே கரகதஅள்ளியில் மோட்டார்சைக்கிள் மீது சரக்குவாகனம் நேருக்கு நேர் மோதியதில் 1 வயது குழந்தை பலி, தந்தை உட்பட 3பேர் படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இன்று காலை செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் 3 குழந்தைகளுடன் கரகத அள்ளியிலிருந்து பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார், கரகதஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருப்பத்தில் சென்ற போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். அனைவரையும் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதில் செளடேஸ்வரி (வயது.1) என்ற பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது, மற்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
