
மதுரை ரெயில் நிலையம் முன்பு கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
மதுரை ரெயில் நிலைய முன்பு திலகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகப்படும் வகையில் கிழக்கு நுழைவாயில் அருகே நின்ற ஆட்டோவை கண்காணித்தார். அந்த ஆட்டோவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் மெயின் ரோடு சிராக்உசேன் மகன் முகமது அனிபா (36), தனக்கன்குளம் வெங்களமூர்த்திநகர் மீரா உசேன் மகன் இம்ரான் கான் (22) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, ரூ. 2,590-யும் போலீசார் பறிமுதல் செய்தனர்
