
பாலக்கோடு அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியை தர்மபுரி பஸ் நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு வாலிபர் தலைமறைவானர், தகவலறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியை மீட்டு விசாரித்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது, மாணவியின் பெற்றோர் வாலிபர் மீது பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வாலிபர் பொரத்தூரை சேர்ந்த முத்து மகன் கவியரசன் (வயது .20) மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கவியரசனை கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
