Police Department News

CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள்

CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள்

Central Board of Secondary Education எனப்படுகின்ற மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
‘நீட்’ தேர்வுமருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ தேர்வு;
மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படுகின்றன.
இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி வருகின்றன.
இக்கல்வி திட்டத்தை செயல்படுத்த, பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன. சில பள்ளிகளே, அவற்றை முறையாக கடைபிடித்து அனுமதி பெற்றுள்ளன. பெரும்பாலான பள்ளிகள் அனுமதி பெறுவதற்காக, விண்ணப்பங்களை மட்டும் அனுப்பி உள்ளன.இன்னும் சில பள்ளிகள் விண்ணப்பிக்காமலேயே, சி.பி.எஸ்.இ., என விளம்பரம் செய்து, பெற்றோரிடம் கட்டண வசூலில் மும்முரம் காட்டுகின்றன. பெற்றோரும், சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான அனுமதி அல்லது அங்கீகாரம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர்.

விதிமுறைகள்
·
பள்ளி பரப்பளவு, 2 ஏக்கர் இருக்க வேண்டும்.
· வகுப்பறை, 500 ச.அடி; ஆய்வகம் 600 ச. அடியில் இருக்க வேண்டும்.
· நுாலகம், படிக்கும் அறையுடன், 14 மீ.,க்கு 8மீ., என்ற அளவில் இருக்க வேண்டும்.
· கணிப்பொறி, கணித ஆய்வகங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்.
· பள்ளிக்கான தற்காலிக அனுமதி பெறுவோர், அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று, அத்துறை மூலம், மத்திய கல்வி வாரியத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
· தமிழக அரசின் அங்கீகாரத்தையும், மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
· ஒரு வளாகத்தில், மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளி மட்டுமே இயங்க முடியும்.
· அனுமதி எண்ணை, பள்ளி அறிவிப்பு பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது. அதன்படி பள்ளிகள் செயல்படுகின்றனவா என பெற்றோர் அறிவது அவசியம்.
· பள்ளி முதல்வராக இருக்கும் ஆசிரியர்கள் அதற்கான தகுதித் தேர்வை (Principal Eligibility Test-PET) எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
· புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாறக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published.