
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் பத்தரகாளியம்மன் கோவில் பிரச்சனையில் மறியலில் ஈடுபட முயன்ற ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டு கட்டாக கைது செய்யபட்டு போலீசார் குவிப்பு
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக கோவில் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நேற்று அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் திரு. கல்யாண குமார் தலைமையில் இரு தரப்பினர் இடையே சமாதான கூட்டம் நடைபெற்றது.
ஆனால் அந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால் ஒரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்றிரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில் அதே பிரச்சனையில் மீண்டும் கிராமத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
பொது போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் விதமாக இருந்ததால் அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
இதில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதனால் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர பாலவனத்தம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்சமயம் நிலமை சீராகவும் அமைதியாக இருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
