மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சோதனை சாவடி திறப்பு
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சார்பில் அச்சம் பத்து நான்கு வழி சாலையில் 24X7 சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்க கூடிய சோதனை சாவடி நாளை 06.02.2023 திங்கட்கிழமை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. R. சிவபிரசாத் IPS அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைக்கிறார். உடன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. R. பாலசுந்தரம் B.Sc, B.Ed.அவர்கள் முன்னிலையிலும் காவல் ஆய்வாளர் B. சிவக்குமார் B.B.A. அவர்கள் ஒருங்கிணைப்பில் திறந்து வைக்கிறார்.
கஞ்சா கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் ரூ.10,000 அபராதம் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2019ம் ஆண்டு தொடரப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில் (607/2019), வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆசை (எ) நாகமுருகன் என்பவருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் கஞ்சா கடத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதமும், விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத்தந்த காவல்துறையினரை மாநகர காவல் […]
திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு வகுப்பு எடுத்த காவல்துறையினர் திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து அவர்களுக்கு வகுப்பு எடுத்து காவல்துறையினர் அசத்தினர். திண்டுக்கல் மாவட்டம் ஶ்ரீராமபுரத்தில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கனேசன் ஆகியோர் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டை விட்டு வெளியே தேவையில்லாமல் வந்து வாகனத்தில் ஊர் சுற்றித்திரிபவர்களை, வெளியில் வராமல் இருக்கவும் இரு […]
மதுரையில் கந்து வட்டி வழக்கில் ஒருவர் கைது மதுரை காமராஜர் புரம் கக்கன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி செல்வி என்பவர் தனது குடும்ப கஷ்டத்திற்காக அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பூரணம் ஆகியோரிடம் ரூபாய் 1,85,000 வட்டிக்கு கடனாக பெற்று அதற்காக மாதந்தோறும் வட்டித் தொகை 10,000/- செலுத்தி வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த 2 மாதகாலமாக வட்டி தொகையினை செல்வி செலுத்தவில்லை என்பதால் ஆறுமுகம் மற்றும் அவரது […]