

பாலக்கோட்டில் மின் கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் ஒயர்மேன் பலத்த காயம் .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (50) இவர் பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வருகிறார்.
இன்று காலை இவர் கல்கூடபட்டி பகுதியில் பழைய மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்த பலத்த காயம் ஏற்பட்டது. சகஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்
உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு
மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
