
பாலக்கோடு கோடியூர் கிராமத்தில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுவன் வீட்டை விட்டு ஓட்டம், கண்டுபிடித்து தர தந்தை போலீசில் புகார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கோடியூர் கிராத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சஞ்சய் வயது-17 தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார், தந்தையயிடம் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார், தந்தை மறுத்து வந்ததால்
அதிகாலை கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளான், குடும்பத்தார்
பல்வேறு இடங்களில் தேடியும் மகன் கிடைக்காததால் மகனை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் பாலக்கோடு காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து செல்லும் போது கருப்பு வெள்ளை நிற டீ ஷர்ட், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்ததாகவும் மாநிறம் உடைய சிறுவனை கன்டால் பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க பாலக்கோடு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும்
இதுகுறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
