STOP LINE AWARNESS AND ROAD SAFETY AWARNESS J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.வெங்கடேஷன் அவர்கள்.
கொரோனா விழிப்புணர்வு 24.03.2021 இன்று கந்தன் சாவடி சரவணபவன் ஹோட்டல் அருகில் மற்றும் பெருங்குடி அப்பொல்லோ சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் ஆகியோருக்கு சமூக இடைவெளியோடு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்ளவேண்டும் என்பதை ஒலிபெருக்கி மூலமாகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையிலும் அதுபோன்று சீட் பெல்ட் அவசியமாக அணிவது பற்றியும் ஹெல்மெட் கட்டாயமாக அணியவேண்டும் என்பதை பற்றியும் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் மிக சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.மதுபோதையில் வாகனத்தை இயக்ககூடாது அப்படி குடித்துவிட்டு பயணிப்பவர் மீது காவல்துறை கடுமையான அபராதம் விதிக்ககூடும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டார். அதுமட்டுமின்றி வாகனத்திற்கு தேவையான ஆவணங்கள் எல்லாவற்றையும் LIVE-ல் வைத்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கியதுடன் பெண்களுக்கும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்னார்.இப்படி இரவு பகல் பார்க்காமல் சேவை என்று கருதாமல் மக்களுக்கு தியாகமாக செய்து வருகிறார் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெஙகடேஷன் சாலை பாதுகாப்பில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டினர்.
