Police Department News

தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கடைபிடிப்பு

தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கடைபிடிப்பு

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

2019-20-ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ”ஆட்சிமொழிச் சட்ட வாரம்” ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று முதல் 8-ந் தேதி வரை ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள் அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி நடத்தியும், அரசு அலுவலர்களுக்கு கணினித் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கு பயிற்சி அளித்தும், மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்களுடன் பட்டிமன்றம் நடத்தியும், ஒன்றியம், வட்ட அளவில் அரசு பணியாளர்கள், பொதுமக்கள், தமிழ் அமைப்புகளுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தியும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டா டப்பட உள்ளது.

தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொள்ள தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரத்தை சிறப்பாக கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.