
மாவட்ட காவல் துறை கூட்டுறவு சொசைட்டி சார்பில் 10. ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பஞ்சப்பள்ளி உதவி காவல் ஆய்வாளரின் மகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்ட காவல் துறையின் கூட்டுறவு சொசைட்டி சார்பில் காவல்துறை அலுவலர்களின் பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் 10ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து 2020-2021 ம் கல்வி ஆண்டில் 10 ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற பஞ்சப்பள்ளி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஷபி அவர்களின் மகள் லயீக்கா ஷா அவர்கள் தர்மபுரி மாவட்ட அளவில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். மாணவியை கெளரவிக்கும் வகையில் கூட்டுறவு சொசைட்டி தலைவர் திருமால் அவர்களின்
தலைமையில் செயலாளர் வடிவேல் அவர்கள் முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை
வழங்கி கௌரவித்தார் .
