Police Department News

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் பொதுகழிவறையில் மனித மலத்தை கையால் அள்ள வைத்த விவகாரம் தொடர்பாக தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நேரில் விசாரனை .

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் பொதுகழிவறையில் மனித மலத்தை கையால் அள்ள வைத்த விவகாரம் தொடர்பாக தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நேரில் விசாரனை .

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் உள்ள 15வது வார்டு பொதுக் கழிவறையில் கடந்த 25.10.2022ம் ஆண்டு தூய்மை பணியாளர்களான வெங்கடேசன், கோவிந்தராஜ் ஆகியோரை பேரூராட்சி அதிகாரிகள் | மனித மலத்தை கையால் அள்ள வைத்தது தொடர்பாக தேசிய துப்புரவு பணியாளர் ஆனையத்திற்க்கு புகார் சென்றது.
புகார் தொடர்பாக ஆணைய தலைவர் வெங்கடேசன் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரனை மேற்கொண்டார்.
இதுகுறித்து ஆனைய தலைவர் வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பில்
நேரடி கள ஆய்வு மேற்கொண்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை தனித் தனியாக விசாரனை மேற்கொண்டதில் மனித கழிவுகளை மனிதன் அள்ள கூடாது என்கின்ற சட்ட விதிமுறைக்கு புறம்பாக இரவுக் காவலர் சங்கரன் என்பவர் மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்களின் கைகளால் அள்ள வைத்தது தெரியவந்தது,
இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த விசாரனையின் போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாமலை, பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜன், தாசில்தார் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.