
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு- காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மணப்பாறை பகுதியில் நவீன அரிசி ஆலையில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது.அதனை மறுத்து வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து மாவட்ட வருவாய் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
அதனடிப்படையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில்
இயங்கி வரும் நவீன அரிசி ஆலைகளில் வே
லை பார்க்கும் வட மாநில
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் வடமாநில தொழிலாளர்களுக்கு
பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
