சிவகிரியில் பழிக்குப்பழியாக சம்பவம்- ஜாமீனில் வந்த வாலிபர் கொலையில் 7 பேரை பிடித்து விசாரணை
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதியன்று சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று மதியம் சிவகிரியில் ஒரு வக்கீலை பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருடன் செல்வக்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அரசு மருத்துவமனை அருகே அவரை வழிமறித்த கும்பல் செல்வக்குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து சிவகிரி இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீஸ் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டதில் பழிக்குப்பழியாக அவரது நண்பர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரியவந்து.
இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்